• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
  • 044 22353134
  • Font Size: A A A
  • English

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

காற்றின் தன்மை கண்காணிப்பு

நகர்புறங்களில் பெருகிவரும் தொழிற்சாலைகளிலிருந்து, வெளியேறும் வாயுக் கழிவுகளினாலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் மிக அதிகமான புகையினாலும் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசடைகிறது. காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981ன்படி தமிழ்நாடு மாநிலம் முழுவதும் காற்று மாசு கட்டுப்பாடு பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணித்தல்

தேசிய காற்று மண்டல கண்காணிப்பு திட்டத்தின் கீழ் (தே.கா.ம.க.தி) சென்னை நகரில் கீழ்க்கண்ட எட்டு இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் காற்று மண்டல கண்காணிப்பு நிலையங்கள் உள்ள இடங்கள்

1. கத்திவாக்கம் - தொழிற்சாலைப் பகுதி
2. மணலி - தொழிற்சாலைப் பகுதி
3. திருவொற்றியூர் - தொழிற்சாலைப் பகுதி
4. கீழ்ப்பாக்கம் - வியாபாரம் மற்றும் வாகனப் புழக்கப் பகுதி
5. தி.நகர் - வியாபாரம் மற்றும் வாகனப் புழக்கப் பகுதி
6. நுங்கம்பாக்கம் - வியாபாரம் மற்றும் வாகனப் புழக்கப் பகுதி
7. அண்ணாநகர் - குடியிருப்புப் பகுதி
8. அடையார் - குடியிருப்புப் பகுதி

இவ்விடங்களில் வாரம் இருமுறை 24 மணி நேரமும் கண்காணிப்பு நடத்தி, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 10 மைக்ரானுக்கும் குறைந்த சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்கள், 2.5 மைக்ரானுக்கும் குறைந்த சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்கள், சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன்டை ஆக்சைடுகள் போன்ற வாயுக் கழிவுகளின் அளவுகள் கண்டறியப்படுகிறது. தூய்மையான காற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள தேசிய தரக்கட்டுப்பாட்டு அளவுகோல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பகுதி கழிவுகளின் வருடாந்திர சராசரி தர அளவுகள் (மைக்ரோ கிராம்/கனமீட்டர்)
சல்ஃபர் டை ஆக்சைடு நைட்ரஜன் டை ஆக்சைடு சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்கள்
தொழிற்சாலைப் பகுதி குடியிருப்பு, கிராமம் மற்றும் பிற பகுதிகள் 50 40 60

இவ்வாரியத்தின் காற்றுத் தர கண்காணிப்பின் மூலம் சென்னையில் உள்ள தொழிற்சாலைப் பகுதிகளில் அளவிடப்பட்ட சல்ஃபர் டை ஆக்சைடு, மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடுடின் அளவுகள் கட்டுக்கடங்கி இருப்பது தெரியவருகிறது. சுவாசிக்கும் போது உட்செல்லக் கூடிய மிதக்கும் நுண்துகள்களின் அளவுகள் சென்னையில் தியாகராய நகர், நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் தூசு, குழாய்கள் பதித்தல், தொலைப்பேசி மற்றும் மின்சார கேபிள் அமைக்கும் பணிகள், அதிகமான வாகனப் போக்குவரத்து, பாதசாரிகளின் நடமாட்டம் ஆகியவை மிதக்கும் நுண்துகள்கள் காற்று மண்டலத்தில் அதிகரிக்க காரணமாகும். 2018-2019 ஆம் ஆண்டுக்கான தேசிய காற்று மண்டல கண்காணிப்பு திட்டத்தின் கீழ் அளவிடப்பட்ட காற்று மாசின் சராசரி அளவீடுகள் இணைப்பு 6–ல் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி காற்று மாசு காரணிகளின் அளவுகள் கிண்டியில் உள்ள தலைமை அலுவலகத்தின் வாயில்முன் வைக்கப்பட்டுள்ள மின்னனு காட்சி பலகையில் பொது மக்களின் கவனத்திற்காக வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெரிய நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணித்தல்

தேசிய காற்று மண்டல கண்காணிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தரத்தினை வாரியம் கண்காணித்து வருகிறது. கண்காணிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் பின்வருமாறு:

வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
தூத்துக்குடி (1988 ஆம் ஆண்டு முதல்)
1 இராஜா ஏஜென்சீஸ் தொழிற்சாலை பகுதி
2 சிப்காட் தொழிற்சாலை பகுதி
3 ஏ.வி.எம். கட்டிடம் கலப்பு குடியிருப்பு பகுதி
கோயமுத்தூர் (1991 ஆம் ஆண்டு முதல்)
4 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கலப்பு குடியிருப்பு பகுதி
5 பொன்னையா ராஜபுரம் குடியிருப்பு பகுதி
6 சிட்கோ கட்டிடம் தொழிற்சாலை பகுதி
சேலம் ( 1996 ஆம் ஆண்டு முதல்)
7 சௌடேஸ்வரி கல்லூரி கலப்பு குடியிருப்பு பகுதி
மதுரை (1996 ஆம் ஆண்டு முதல்)
8 நெடுஞ்சாலைத்துறை கட்டிடம் கலப்பு குடியிருப்பு பகுதி
9 சுசி கார்ஸ் ட்ரக்ஸ் (பி) லிட் தொழிற்சாலை பகுதி
10 மதுரை மாநகராட்சி அலுவலகம் (தெற்கு) கலப்பு குடியிருப்பு பகுதி
திருச்சி (2012 ஆம் ஆண்டு முதல்)
11 காந்தி மார்க்கட் வியாபாரப் பகுதி
12 மெயின் கார்டு கேட் போக்குவரத்துப் பகுதி
13 பிஷப் ஹீபர் கல்லூரி கலப்பு குடியிருப்பு பகுதி
14 பொன்மலை குடியிருப்பு பகுதி
15 மத்திய பேருந்து நிலையம் போக்குவரத்துப் பகுதி
கடலூர் (2013 ஆம் ஆண்டு முதல்)
16 ஈச்சங்காடு கிராமம் குடியிருப்பு பகுதி
17 மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் வியாபாரப் பகுதி
18 சிப்காட் தொழிற்சாலை பகுதி
மேட்டூர் (2013 ஆம் ஆண்டு முதல்)
19 இராமன் நகர் குடியிருப்பு பகுதி
20 சிட்கோ தொழிற்சாலை பகுதி

இத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களும், வாரமிருமுறை 24 மணி நேரமும் இயங்குகின்றன. சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் தூசுகள் (10 மைக்ரானுக்கு குறைந்தவை) சல்ஃபர்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு போன்ற வாயுக்கள் இந்த நிலையங்கள்மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

2018-2019 ஆம் ஆண்டின் சுற்றுப்புற காற்று தர புள்ளிவிவரப்படி தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம், திருச்சி, கடலூர் மற்றும் மேட்டூரில் சல்ஃபர் டை ஆக்சைடு, மற்றும் நைட்ரஜன் டையாக்சைடு ஆகிய இரண்டும் நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில், ராஜா ஏஜென்சிஸ் என்ற இடத்தில் மட்டும் சுவாசிக்கும் மிதக்கும் துகள்களின் வருடாந்திர சராசரி அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளன. அதிகமான வாகன எண்ணிக்கை, வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் மேற்பரப்பு தூசு, குழாய்கள், மின் மற்றும் தொலைபேசி கேபிள்கள் பதித்தல், , அதிகமான வணிக மற்றும் தொழிற்சாலை நடவடிக்கை ஆகியவை சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் துகள்கள் அதிகமாயிருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

Air Quality Index 25 CAAQMS
Ambient Air Quality Data of Chennai
Air Quality Index of NAMP Stations
Location January - 2021 To July -2021 January - 2020 To December -2020 January - 2019 To December -2019 June - 2018 to December - 2018
Ambattur View View View View
Chennai View View View View
Cuddalore View View View View
Coimbatore View View View View
Madurai View View View View
Salem and Mettur View View View View
Trichy View View View View
Thoothukudi View View View View
Action plan for the Non Attainment city- Thoothukudi