• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

தீங்கு விளைவிக்கும் கழிவு மேலாண்மை

தீங்கு விளைவிக்கும் கழிவு மேலாண்மை

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், தீங்கு விளைவிக்கும் மற்றும் இதர கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்து கொண்டு செல்லுதல்) விதிகள், 2016 – யை அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகளின்படி தீங்கு விளைவிக்கும் கழிவு என்பது ஏதாவது அதனுடைய இயற்பியல், வேதியியல், மறுவினையாக்கம், நச்சு பண்பு, எரியக்கூடிய, வெடிக்கக்கூடிய அல்லது அரிமான பண்புகளுடையதும், அல்லது மனிதநலம் அல்லது சுற்றுச்சூழலுக்கு அபாயம் தரவல்லது ஆகும். தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உற்பத்தி செய்வோர், அக்கழிவுகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்தல், குறைத்தல், மறு உபயோகம் செய்தல், மறு சுழற்சி செய்தல், மீளப்பெறுதல், இணை செயலாக்கத்திற்கு பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற வழிமுறைகளை கையாளவேண்டும். இவ்விதிகளின்படி மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரத்தை வழங்கவேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், 3545 தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து இவ்விதிகளின் கீழ் அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6.92 இலட்சம் டன் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 2.97 இலட்சம் டன் கழிவுகள் நில நிரப்பு செய்யப்படுபவை, 3.43 இலட்சம் டன் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுபவை மற்றும் 0.52 இலட்சம் டன் கழிவுகள் எரிப்பான் மூலமாக எரிக்கக்கூடியவை. தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்களைச் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்புமின்றி விஞ்ஞான முறையில் பாதுகாப்பாக கையாளுவதற்கு தகுந்த மேலாண்மை நடவடிக்கையினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எடுத்து வருகிறது. கும்மிடிபூண்டியில் அமைந்துள்ள சிப்காட் வளாகம் மற்றும் விருதுநகர் மாவட்டம், உண்டுஉருமிகிடாக்குளம் கிராமத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை, பாதுகாப்பாக சுத்திகரித்து நிலம்நிரப்பும் பொதுவசதிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

துணி சாயமிடும் தொழிற்சாலைகளின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உருவாகும் தீங்கு விளைவிக்கும் திடக்கழிவினை சிமெண்ட் தொழிற்சாலைகளில் மூலப் பொருளாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்துவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னோடி முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்ட சுமார் 50,000 டன் திடக்கழிவுகள் சிமெண்ட் தொழிற்சாலையில் மூலப் பொருள்களுடன் கலந்து சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை சீரமைப்பு செய்து அதனை சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இராணிப்பேட்டையில் ஒரு பொது வசதியை ஏற்படுத்தி இயக்கிவருகின்றது.

வாரிய அங்கிகாரம் பெற்ற கழிவு இரும்பு அல்லாத உலோகங்கள் துத்தநாகம் மற்றும் தாமிரம் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்

1. M/s. Tamilnadu Waste Management Ltd, Plot No. 5-15, & 28-33 EPIP, SIPCOT Industrial Complex, Gummidipoondi Taluk, Tiruvallur District.

2. M/s. Tamilnadu Waste Management Ltd, Plot No. 135 – 138 etc, Unduorumikidakulam village, Virudhunagar district.