• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
 • 044 22353134
 • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

வாரியத்தின் செயல்பாடுகள்

வாரியத்தின் செயல்பாடுகள்

நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 - ன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கியப் பணிகள் பின்வருமாறு :

 • நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் பற்றிய விரிவான திட்டம் தீட்டுதல்.
 • நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் தொடர்புடைய தகவல்களை சேகரித்தல் மற்றும் வெளியிடுதல்.
 • வடிகால் கழிவுநீர் மற்றும் செயல்முறைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறனை ஆய்வு செய்தல் மற்றும் திட்டங்கள், தரநிர்ணயங்களை சரி செய்வதற்காக அவற்றை பரிசீலனை செய்தல்.
 • காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி முறையில் மாசினை குறைக்கும் உபகரணங்களை ஆய்வு செய்து தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டுதல்.
 • காற்று மாசு கட்டுப்பாடு பகுதியில் காற்றின் தன்மையை அளவீடு செய்ய ஆய்வு செய்தல் மற்றும் காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்துதல், தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • வடிகால் கழிவுநீர் மற்றும் செயல்முறைக் கழிவுநீர், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் பிற ஆதாரங்களிலிருந்து காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படும் வாயுக்கழிவுகள் ஆகியவற்றிற்கு வரையறைகளை விதித்தல், மாற்றி அமைத்தல் அல்லது நீக்குதல்.
 • வடிகால் கழிவுநீர் மற்றும் செயல்முறைக் கழிவுநீரை சிறந்த முறையில் பொருளாதார ரீதியாக உகந்த வழியில் சுத்திகரிப்பு செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
 • வடிகால் கழிவுநீர், செயல்முறைக் கழிவுநீர் மற்றும் வாயுக்கழிவுகளின் மாதிரிகளைச் சேகரித்து குறிப்பிட்ட தன்மைகளை தர அளவீட்டிற்காக பகுப்பாய்வு செய்தல்.
 • மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து, நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்க, கட்டுப்படுத்த மற்றும் குறைப்பது சம்பந்தமான திட்டங்களில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடுத்தப்படும் நபர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
 • மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில அரசு குறிப்பிடும் பிற பணிகளையும் நிறைவேற்றுதல்.