• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

மருத்துவக் கழிவு மேலாண்மை

மருத்துவக் கழிவு மேலாண்மை

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகளின் படி மருத்துவக் கழிவு என்பது மனித இனம் மற்றும் விலங்கினங்களுக்கு நோய் பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், நோய் தடுப்பு செய்தல், மற்றும் மருத்துவ ஆராய்ச்சி செய்தல், மருத்துவ முகாம்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகளாகும். மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து சுத்திகரிப்பு செய்து அகற்றுவது, மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்வோர் மற்றும் பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தினை இயக்குவோர்களின் பொறுப்பாகும். மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை அனைத்து மருத்துவமனைகளும் சரிவர பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்வது மாநில அரசு சுகாதாரத்துறையின் பொறுப்பாகும்.

மருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி, அந்நிறுவனங்கள் விதிகளை சரிவர கடைபிடிக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தை சார்ந்ததாகும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இவ்விதிகளின் கீழ் 6261 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் மருத்துவக்கழிவுகளை சேகரித்தல், கொண்டு செல்லுதல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் விஞ்ஞான முறைப்படி அகற்றுதல் பொருட்டு பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் உயர் அழுத்த நீராவி மூலம் சுத்திகரிக்கும் கருவி, துரும்பாக்கும் கருவி, எரிப்பான் மற்றும் பாதுகாப்பான நிலநிரப்பு ஆகிய அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 11 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்கத்தில் உள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு 43 டன் மருத்துவக்கழிவுகள் கையாளப்படுகின்றன. மேலும் 3 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் திருவள்ளூர், கடலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிறுவப்பட்டு வருகின்றன.

மருத்துவக் கழிவுகளை மேலாண்மை செய்யும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள்

வ.எண் பொது மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி மருத்துவக் கழிவுகள் சேகரிக்கும் பகுதிகள் கையாளப்படும் மருத்துவக் கழிவுகளின் அளவு (கிலோ கிராம் நாளொன்றுக்கு)
1 தி/ள். ஜி.ஜே. மல்ட்டிகிளேவ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தென் மேல்பாக்கம், செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம். சென்னையின் சில பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம். 6160
2 தி/ள். தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மேன்ட் லிமிடெட், கின்னர் கிராமம், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம். வடசென்னை, திருவள்ளூர் மாவட்டம், கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் (பகுதி). 6660
3 தி/ள். மெடிகேர் என்விரான்மென்ட் சிஸ்டம்ஸ், சென்ஜிபட்டி, தஞ்சாவூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம். 1800
4 தி/ள். கென் பயோ லிங்க்ஸ், கண்டிபேடு, காட்பாடி வட்டம், வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம், வாணியம்பாடி மாவட்டம். 7660
5 தி/ள். சொசைட்டி ஃபார் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட், குன்னூர், நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் 766
6 தி/ள். நீட் & கிளீன் சர்வீஸ் ஸ்குவாட், முத்துவயல் ராமநாதபுரம் மாவட்டம். இராமநாதபுரம் மாவட்டம். இராமநாதபுரம் மாவட்டம். 21
7 தி/ள். ராம்கி எனர்ஜி & என்விரான்மென்ட் லிமிடெட், தங்காயூர், சேலம் மாவட்டம். சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம், ஈரோடு மாவட்டம் (பகுதி), தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், கரூர் மாவட்டம், பெருந்துறை மாவட்டம் 1500
8 தி/ள். டெக்னோ தெர்ம் இண்டஸ்ட்ரீஸ், ஒரட்டுகுப்பை கோயம்புத்தூர் மாவட்டம். கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம் (பகுதி), நீலகிரி மாவட்டம், ஈரோடு மாவட்டம் (பகுதி). 2500
9 தி/ள். கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், ஒரட்டுகுப்பை, கோயம்புத்தூர் மாவட்டம். கோயம்புத்தூர் மாவட்டம் 1450
10 தி/ள். ராம்கி எனர்ஜி & என்விரான்மென்ட் லிமிடெட், விருதுநகர் மாவட்டம். மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம் மற்றும் ராமநாதபுர மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் 4000
11 தி/ள். அசெப்டிக் சிஸ்டம் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி, பாப்பன் குளம், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம்,கன்னியாக்குமரி மாவட்டம். 1650