• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

மேல்முறையீட்டு ஆணையம்

மேல்முறையீட்டு ஆணையம்

மாண்புமிகு மேல் முறையீட்டு ஆணையம், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர்கள் தலைமையின் கீழ் இரண்டு தொழில்நுட்ப உறுப்பினர்களை கொண்டு அரசாணை எண். 66, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தேதி 7.5.2013-ன்படி அமைக்கப்பட்டது. இது எண். 51, கங்காதீஸ்வரர் கோவில் தெரு, புரசைவாக்கம், சென்னை – 86-ல் இயங்குகிறது. திருத்தப்பட்ட 1974-ஆம் ஆண்டு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் பிரிவு 25, 26 அல்லது 27 மற்றும் திருத்தப்பட்ட 1981-ஆம் ஆண்டு காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவொரு நபரும், மேற்கூறிய ஆணையத்திடம் மேல்முறையீடு விண்ணப்பம் செய்யலாம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனபாதுகாப்புக்குரிய வழக்குகளை பயனுள்ளதாகவும், விரைவாகவும் முடித்து வைக்க 18.10.2010 அன்று புதுடில்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தேசிய தீர்ப்பாயம் சட்டம் 2010-யின் படி பிரிவு 28/29 மற்றும் 33ஏ-படி நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974, பிரிவு 13 நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) மேல் வரி சட்டம் 1977, பிரிவு 31 காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் பிரிவு 5 சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் முடிவுகளின்பால் இடருற்ற நபர்கள் மேற்கூறிய ஆணைகள் கிடைக்க பெறப்பட்ட 30 தினங்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

சென்னையில் தென் மண்டலத்திற்கான தேசிய பசுமை தீர்பாயம் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. தென் மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தினை அமைக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பெருமளவு உதவி புரிந்துள்ளது. மேலும் சென்னையில், தேசிய பசுமை தீர்பாயத்தின் இரண்டாவது அமர்வை ஏற்படுத்த வாரியம் உதவி புரிந்து, இரண்டாவது அமர்வானது 23.03.2015 முதல் இயங்கி வருகின்றது. தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அரும்பாக்கம், சென்னை-106-ல் உள்ள தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவருகின்றது.